#BREAKING : கம்பம் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுப்புராயர் காலமானார்..!
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சுப்புராயர் (76) மாரடைப்பால் காலமானார். திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர், 1984ஆம் ஆண்டு கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஆனார்.
2017ஆம் ஆண்டு சசிகலா, ஓபிஎஸ் பிரிவினை ஏற்பட்டபோது ஓபிஎஸ் பக்கம் நின்று, அவர் முதல்வராக நீடிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் சுப்புராயர்.
அவரது மறைவுக்கு அதிமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.