#BREAKING : அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கணவர் காலமானார்!

முன்னாள் அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் திருமதி *கோகுல இந்திரா* அவர்கள் கணவரும் ஏஆர்சி சேம்பர்ஸ், ஹோட்டல் உரிமையாளருமான திரு *ஆறு.சந்திரசேகர்* பிஏபிஎல் அவர்கள் உடல்நல குறைவால் காலமானார்
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் இன்று (ஏப்.24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அதிமுகவினர், பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இரங்கல் செய்தி:
— RCD Kamal Govindraj- SayYesToWomenSafety&AIADMK (@NameisKamal) April 24, 2025
முன்னாள் அமைச்சர் கழக அமைப்பு செயலாளர் திருமதி *கோகுல இந்திரா* அவர்கள் கணவரும் ஏஆர்சி சேம்பர்ஸ், ஹோட்டல் உரிமையாளருமான திரு *ஆறு.சந்திரசேகர்* பிஏபிஎல் அவர்கள் உடல்நல குறைவால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/1qyOHqodc8