#BREAKING : கோர விபத்து: 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

திருத்தணி கே. ஜி. கண்டிகை பகுதியில், இன்று (மார்ச் 7) அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
திருத்தணி அருகே, அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள், திருத்தணி அரசு மருத்துவமனையிலும், ஆரம்ப சுகாதார நிலையத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருத்தணியில் கே.ஜி. கண்டிகை என்ற பகுதியில் சாலையில் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது லாரி மோதியதாகக் கூறப்படுகிறது.