#BREAKING : 2025ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி அறிவிப்பு..!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 6, 2025 அன்று தொடங்கவுள்ளது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், இந்த முறை ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை முழுமையாக வாசிப்பார் என நம்புகிறோம் என்றார்.
இந்த கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்" என்றார்.