#BREAKING : திருப்பதி செல்லும் ரயிலில் பயங்கர தீ விபத்து...இரண்டு பெட்டிகள் தீயில் கருகி சேதம்!
திருப்பதி ரயில் நிலையம் அருகே ஹிசார் எக்ஸ்பிரஸில் திங்கள்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர். அப்பகுதியில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
ஹிசாரிலிருந்து திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் இன்று திடீரென தீ விபத்திற்கு உள்ளானது. தீ விபத்து ஏற்பட்டதும் பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். இது தொடர்பாக உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டதும் தீயணைப்பு வீரர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இரண்டு பெட்டிகள் எரிந்து சேதம் அடைந்தன.
இந்த விபத்தில் எந்தவொரு உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. ரயிலில் தீ விபத்துக்கான காரணங்களை ரயில்வே அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Telangana | A fire broke out in the stationary train coaches of the Hisar Express and Rayalaseema Express at the Tirupati Railway Station yard. The flames spread to two coaches of both trains while they were stationed at the railway yard. Firefighting operations are underway.…
— ANI (@ANI) July 14, 2025