1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : விரைவு ரயிலில் தீ விபத்து!

1

தெலங்கானா - செகந்திராபாத் ரயில் நிலைய பாலத்தில் தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைதராபாத் விரைவு ரயிலில் தீ விபத்து! தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்; ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செகந்திராபாத் தீயணைப்பு நிலைய அதிகாரி டி.மோகன் ராவ் கூறுகையில், "இன்று காலை 10.50 மணியளவில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹைதராபத் ரயிலில் உள்ள பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அழைப்பு வந்தது. 

5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்..


 

Trending News

Latest News

You May Like