#BREAKING : டில்லி துவாரகாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ..!

டெல்லியின் துவாரகா பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. ஆறு மாடி அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தீயணைப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, தற்போது இரண்டு அல்லது மூன்று பேர் உள்ளே சிக்கியிருக்கலாம். இருப்பினும், இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.