#BREAKING : சென்னை தி.நகரில் பயங்கர தீ விபத்து..!

சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சென்னை தி. நகரின் ரங்கநாதன் தெருவில் உள்ள ஷோபா ஆடையகத்தின் இரண்டாவது மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
அப்பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்துள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.