1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : ரசிகர்கள் அதிர்ச்சி..! மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் குமார்..!

Q

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் அஜித் குமார். இவரது படங்கள் எப்போது ரிலீஸ் ஆனாலும் அதற்கு மாபெரும் ஓபனிங் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

என்னதான் சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் அஜித்திற்கு எப்போதும் கார் ரேஸில் தான் அதிக ஆர்வம். முன்பு சினிமாவில் நடிக்கும் போதே கார் ரேஸிலும் அவர் கவனம் செலுத்தி வந்தார். இடையில் சில ஆண்டுகள் கார் ரேஸை அவர் விட்டிருந்த நிலையில், இப்போது கார் ரேஸில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். இதற்காக அவர் அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் தனியாக டீமையும் ஆரம்பித்து இருந்தார்.

கடந்த மாதம் துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேஸில் அவரது அணி பங்கேற்றது. இதில் மிக சிறப்பாக செயல்பட்ட அஜித்குமார் ரேஸிங் 3வது இடத்தை பிடித்தது. துபாயை தொடர்ந்து இப்போது போர்ச்சுகல் நாட்டில் கார் ரேஸ் நடைபெறுகிறது. அதிலும் அஜித்குமார் ரேஸிங் பங்கேற்கிறது. 

இந்நிலையில் ஸ்பெயினில் Porsche Sprint Challenge கார் பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்றார். பந்தயத்தில் போட்டியாளர் ஒருவரின் கார் வளைவில் திரும்பிய போது நிலைத்தடுமாறியது. இதனால் அக்காரின் பின் வந்த அஜித்தின் கார் விபத்துக்குள்ளாகி ரேஸ் டிராக்கை விட்டை விலகி 2 முறை உருண்டோடியது. விபத்தில் அஜித்திற்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


 

Trending News

Latest News

You May Like