1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பிரபல அரசியல் தலைவர் கவலைக்கிடம்..!

1

கொல்லத்தைச் சேர்ந்தவர் அப்துல் நாசர் மதானி. மக்கள் ஜனநாயக கட்சித் தலைவராக உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த இவருக்கு பல வருடங்களாக ஜாமீன் வழங்கப்படவில்லை.9 ஆண்டுகளுக்கு பிறகு அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். 2008-ம் ஆண்டு நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கிலும் அவருக்கு தொடர்பு இருக்கிறது.

இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் மதானியின் உடல்நிலை மோசமாகி உள்ளதாகவும் இதைத் தொடர்ந்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like