1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி கைது..!

1

பிரபல டான்ஸ் மாஸ்டரான ஜானி மீது பாலியல் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார் தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த நடனப் பெண் ஒருவர்.இதையடுத்து ஜானி மீது கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கு குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜானியின் மனைவியும் அந்தப் பெண்ணைத் தாக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளாராம். இதனால், அவர் மீது வழக்கு பாயலாம் என்கிறார்கள்.

இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஹைதராபாத்தில் வைத்து நடன இயக்குனர் ஜானியை கைது செய்துள்ளனர்.ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு கல்லூரி ஒன்றுக்குள் நுழைந்து சண்டையிட்டதற்காக சிறை சென்ற நிலையில் தற்போது பாலியல் புகாரில், ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளது திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like