#BREAKING : பிரபல குணச்சித்திர நடிகர் ஆர். எஸ். சிவாஜி காலமானார்..!

பிரபல திரைப்பட நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி. நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான 'அபூர்வ சகோதர்கள்' திரைப்படத்தில் ஜனகராஜ் உடன் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்த இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்தில் இவர் பேசிய 'தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க' வசனம் தற்போது வரை ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.
இவர் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் காமெடி நடிகராகவும், குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'கார்கி' திரைப்படத்தில் ஆர்.எஸ்.சிவாஜியின் நடிப்பு பாராட்டை பெற்றது.
நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி பழம்பெரும் தயாரிப்பாளர் எம்.ஆர் சந்தானத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதியின் சகோதரர். கமல்ஹாசனின் நண்பராக அறியப்படும் இவர் கமலுடன் இணைந்து பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.
மேலும் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பல ஆண்டுகளாக பணியாற்றிவந்துள்ளார். மேலும் தமிழ் திரைப்படத் துறையில் உதவி இயக்குநர், சவுண்ட் டிசைனர் என பல்வேறு துறைகளில் இயங்கி வந்திருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.