#BREAKING : மதுரையில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து..!
சென்னையில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக தடம் புரண்டதாகக் கூறப்படுகிறது. இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான கடைசிப் பெட்டி மட்டும் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மீண்டும் ரயிலின் சக்கரத்தை தண்டவாளத்தில் ஏற்றும் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.