#BREAKING : சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/8710f34b2cbf44fda17db8dc528477dd.jpg?width=836&height=470&resizemode=4)
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது
2 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆலைக்குள் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துச் சிதறுவதால் உள்ளே செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த வெடி விபத்தானது சாத்தூரைச் சுற்றி சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேல் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், அதன் அதிர்வுகள் பல கிலோ மீட்டருக்கு மேல் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்