1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்..!

1

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா கிராமம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நான்சி என்ற சிறுமி பயின்று வந்தார்.

இந்நிலையில் நேற்று  மேங்கோ ரேஞ்ச் பகுதி அங்கன்வாடியில் இருந்து தனது தாயுடன் சிறுமி வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை தாயின் கண்முன்னே சிறுமியை தாக்கி இழுத்துச் சென்றது. தாயின் அலறல் சத்தத்தை கேட்ட தொழிலாளர்கள், தேயிலை தோட்டம் முழுவதும் சிறுமியை தேடினர்.

பின் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி, பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகன மூலமாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் பந்தலூர் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த டிசம்பர் 21ஆம் தேதி ஏலமன்னா பகுதியில் பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த சாரதா, துர்கா, வள்ளியம்மா ஆகிய 3 பெண்கள் காலைக்கடன் கழிப்பதற்காக வனப்பகுதி அருகே உள்ள புதர் பகுதிக்குச் சென்றனர்.அப்போது அங்குப் பதுங்கியிருந்த சிறுத்தை மூவரையும் தாக்கியது. இதில் படுகாயமடைந்த சரிதா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏலமன்னா கிராமத்தை சேர்ந்த சரிதா(29), நான்சி (3) இருவரும் சிறுத்தை தாக்கி உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. இருவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1

Trending News

Latest News

You May Like