#BREAKING : இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்..!

தமிழக சட்டசபையின் கேள்வி-நேரம் முடிந்தபின், டாஸ்மாக் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அனுமதி கேட்டார். அப்போது குறுக்கீட்ட சபாநாயகர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கை பேச அவையில் இடமில்லை என கூறி அனுமதி மறுத்தார்.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு பேச அனுமதி அளிக்காததால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுகவினரை இன்று ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.