1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : இனி ஊட்டி கொடைக்கானல் செல்ல இ பாஸ் தேவை..!

1

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. வழக்கமாக மே மாதத்தில் தான் வெயில் அளவு அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குவதற்கு முன்பே வெயில் அளவு உச்சத்தை எட்டி விட்டது. குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. தினமும் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது.

இவ்வாறு வெயில் வாட்டி வதைப்பதால் வெப்பத்தில் இருந்து தப்பிக்க குளிர்ச்சியான மாவட்டங்கள், குளிர்ச்சியான பகுதிகளுக்கு செல்ல மக்கள் பிளான் போட்டு வருகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் குழந்தைகளோடு சுற்றுலா செல்ல பெரும்பாலானோர் திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த கோடை வெயிலில் இருந்து தப்பிக்க அனைவரின் தேர்வாகவும் இருப்பது  ஊட்டி,  கொடைக்கானல் தான்.இதனால் பலரும்  ஊட்டி, கொடைக்காணலுக்கு படையடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை இ - பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலும் இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்க வேண்டும்; உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்க வேண்டும்; சுற்றுச்சூழல் தொடர்பான வழக்கில் இ-பாஸ் நடைமுறை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்களை கொடுக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தல்.

மக்கள் அதிகம் செல்வதால் அங்கு கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது 

Trending News

Latest News

You May Like