#BREAKING : தமிழகத்தில் மின்சார கட்டணம் திடீர் உயர்வு..!
தமிழகத்தில் 4.83 சதவீதம் வரை மின்கட்டணத்தை உயர்த்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. வீட்டு பயன்பாட்டுக்கான மின்கட்டணம் 400 யூனிட் வரை 20 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது ..யூனிட் ஒன்றுக்கு ரூ.4.60 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனி ரூ.4.80 ஆக வசூலிக்கப்படும்
ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு கணக்கீடு செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்து உள்ளது.
0 முதல் 400 யூனிட்டுகளுக்கு 4 ரூபாய் 60 காசுகளாக இருந்த கட்டணம் 4 ரூபாய் 80 காசுகளாக அதிகரிப்பு
401 முதல் 500 யூனிட்டுகளுக்கு 6 ரூபாய் 15 காசுகளாக இருந்த மின் கட்டணம் 30 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 45 காசுகளாக அதிகரிப்பு.
600 முதல் 800 வரை ஒரு யூனிட்டுக்கு 9 ரூபாய் 20 காசுகளாக இருந்த மின் கட்டணம் 45 காசுகள் அதிகரித்து 9 ரூபாய் 65 காசுகளாக அதிகரிப்பு.
801 முதல் 1000 வரை ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாய் 20 காசுகளாக ஆக இருந்த மின் கட்டணம் 10 ரூபாய் 70 காசுகளாக அதிகரிப்பு
1000 யூனிட்டுகளுக்கு மேல் 11 ரூபாய் 25 காசுகளாக ஆக இருந்த மின் கட்டணம் 11 ரூபாய் 80 காசுகளாக அதிகரிப்பு.
அடுக்குமாடி குடியிருப்புகளில் 8 ரூபாய் 15 காசுகளாக இருந்த மின் கட்டணம் 8 ரூபாய் 55 காசுகளாக அதிகரிப்பு.
#TNEB
— Thamaraikani (@kani_twitz24) July 15, 2024
"தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு"
தமிழகத்தில் 4.83 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு@TANGEDCO_Offcl pic.twitter.com/2qpO7v6rxN