#BREAKING கன்னியாகுமரியில் பிப்ரவரிக்குள் தேர்தல் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த ஹெச்.வசந்த குமார், அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.இதனால், அந்த தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து, அந்த தொகுதியில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி வந்தது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்றும், வி.வி.பேட், ஈ.வி.எம் இயந்திரம் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.
மேலும், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டு போட அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
newstm.in