#BREAKING : தேர்தல் தேதி அதிரடி மாற்றம்..!

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது. ஐந்து மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நவம்பர் 6. என அறிவித்தது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 25 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.