#BREAKING : தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலைவிட வரும் நாடாளுமன்ற தேர்தலில் 6% வாக்காளர்கள் அதிகம் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி, பெண் வாக்காளர்கள் 47.1 கோடி ஆகும். மூன்றாம் பாலினத்தவர் 48,044 பேர், மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்சம் பேர், புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 2.63 கோடி என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.