#BREAKING : அதிமுக வழக்கு: தேர்தல் கமிஷன் விசாரிக்கலாம் என தீர்ப்பு..!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணை தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடையை நீக்கக்கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், புகழேந்தி உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்தது. உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடலாம் என தீர்ப்பளித்து நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.