1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : தமிழ்நாடு அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் - எடப்பாடி பழனிசாமி..!

1

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதிகள் எண்ணிக்கை மறுசீரமைப்பு செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், தமிழகத்தில் 8 தொகுதிகள் குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் "அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் இருந்து அதிக பிரதிநிதிகள் இருப்பார்கள். இதனால் மக்களவையில் தமிழகத்துக்கான பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். தமிழகத்தின் குரல் நசுக்கப்படும். இது வெறும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை சார்ந்த கவலை மட்டும் அல்ல. இது மாநிலத்தின் உரிமை சார்ந்த கவலை" என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மார்ச் 5-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தையும் அறிவித்துள்ளார். இதில் பங்கேற்குமாறு 45 கட்சிகளின் தலைவர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பான தமிழ்நாடு அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்... 

Trending News

Latest News

You May Like