1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : தலைநகர் டெல்லியில் நிலநடுக்கம்... மக்கள் ஓட்டம்..!

1

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சற்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. வீடுகள், அலுவலகங்களில் உள்ள மேஜைகள், நாற்காலிகள் உள்ளிட்டவை ஆடியதாக தகவல் வெளியாகியுள்ளது 

அதேபோல், காஷ்மீரிலும் நில அதிர்வு உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக டெல்லி, காஷ்மீரிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் அதன் அதிர்வலை உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 1 என்ற அளவுகோளில் நிலநட்டுக்கம் பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் டெல்லி, காசியாபாத், நொய்டா, பரிதாபாத், குருகிராம், காஷ்மீர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தானின் லாஹூர், இஸ்லாமாபாத், கைபர் பக்துன்கவா உள்ளிட்ட நகரங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நில நடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட தகவல்களும் வெளியாகவில்லை.  

Trending News

Latest News

You May Like