#BREAKING : டபுள் ஷாக்..! ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை..!
சா்வதேச போர் பதற்றம், உலக நாடுகளின் மீதான அமெரிக்க அரசின் பரஸ்பர வரி விதிப்பு, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறைப்பு அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு சா்வதேச காரணங்களால், தங்கத்தின் விலை உயர்வைக் கண்டு வருகிறது.
தங்கத்தின் மீதான முதலீடும் அதிகரித்து வருகிறது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த 16ம் தேதி சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதைத்தொடர்ந்து சற்று ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.
இன்று (செப்.23) காலை 22K ஆபரணத் தங்கம் 1 கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,500க்கும், ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சற்றுமுன் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து, ரூ.85,1120க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ. 2,800 அதிகரித்துள்ளது.