1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : குழந்தைகளுக்கு பஞ்சு மிட்டாய் கொடுக்காதீர்கள்..! தமிழகத்திலும் வருகிறது தடை ?

Q

கடற்கரைகள் மற்றும் திருவிழாக்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யப்படுகிறது

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் நிறத்திற்காக அதில் சில வேதிப் பொருட்கள் சேர்த்து விற்பனை செய்தது தொடர்பாக தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. குறிப்பாக பஞ்சு மிட்டாயை ரோஸ் உள்ளிட்ட வண்ணங்களில் மாற்றுவதற்காக சேர்க்கப்பட்ட ரோடமைன் பி என்ற வேதிப் பொருளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார்.

இந்நிலையில், புதுச்சேரியை தொடர்ந்து சென்னையிலும் விற்கப்படும் பஞ்சு மிட்டாய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

கடந்த வாரம் சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் பறிமுதல் செய்த பஞ்சு மிட்டாய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பறிமுதல் செய்த பஞ்சுமிட்டாயில் ரொடமைன் பி என்ற புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல் கலந்திருப்பது ஆய்வில் உறுதியானது.

இந்நிலையில் பஞ்சுமிட்டாயை சாப்பிடவேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like