#BREAKING : லேடி சூப்பர்ஸ்டார்-னு கூப்பிடாதீங்க... இப்படியே கூப்பிடுங்க...!

சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நயன்தாரா முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த படத்தை தொடர்ந்து, தனது இரண்டாவது படத்திலேயே சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து, விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ஜெயம்ரவி, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவே மாறினார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடனும் நடித்து பெயர் எடுத்த நயன்தாராவை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என நயன்தாரா சற்றுமுன் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "என் பெயர் தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது ஒரு நடிகராக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும் நான் யார் என்பதைக் குறிக்கிறது. இனிமேல் என்னை நயன்தாரா என்று அழைக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.