1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : டாக்டர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவிப்பு..!

1

அரசு மருத்துவமனையில் புற்றுநோய்த்துறை மருத்துவராக உள்ள பாலாஜி இன்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புறநோயாளி சீட்டை பெற்று மருத்துவர் பாலாஜியை சந்திக்க சென்ற விக்னேஷ் என்பவர் அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

புற்றுநோயாளியான தனது தாயாரின் உடல்நிலை மோசமடைந்ததால் ஆத்திரமடைந்த விக்னேஷ் மருத்துவர் பாலாஜி சரியான சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளளார். இதில் மருத்துவர் பாலாஜியின் கழுத்து, முதுகு உள்ளிட்ட 7 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து அந்த மருத்துவமனையிலேயே மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவர் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அரசு மருத்துவமனையில் பட்டப்பகலில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் இன்று மாலை 6 மணி முதல் நாளை(நவ.14) மாலை 6 மணி வரை வேலைநிறுத்தம் செய்யப்போவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவசர சேவைகள் தவிர அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும் என அறிவிப்பு 

Trending News

Latest News

You May Like