1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 50,002 வாக்குகள் முன்னிலை..!

1

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சி.அன்புமணி, சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்பட மொத்தம் 29 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இவர்கள் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில் தான் இன்று (சனிக்கிழமை) விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதன்பிறகு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மொத்தம் 20 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

14 சுற்று எண்ணிக்கை முடிந்த நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 88,977 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாமக வேட்பாளர் சி அன்புமணி 38,975 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர் அபிநயா 7,275 வாக்குகளை பெற்றுள்ளார். இந்நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 50,002 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

Trending News

Latest News

You May Like