#BREAKING : தஞ்சை மாவட்ட திமுக செயலாளரான திரு கல்யாணசுந்தரம் நீக்கம்...!
தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து MP கல்யாணசுந்தரத்தை நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அப்பொறுப்பில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள சாக்கோட்டை க.அன்பழகன் நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. CM ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களுக்கு பயணம் செய்ய உள்ள நிலையில் கல்யாணசுந்தரத்தின் பதவி பறிப்பு திமுகவில் பேசுபொருளாகியுள்ளது.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பு வகித்துவரும் சு.கல்யாணசுந்தரம், எம்.பி, அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக திரு. சாக்கோட்டை க.அன்பழகன், எம்.எல்.ஏ, (நாக்கியன் கோவில் மெயின் ரோடு, சாக்கோட்டை அஞ்சல், கும்பகோணம், தஞ்சை மாவட்டம்) அவர்கள் தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
