1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: திமுக எம்.எல்.ஏ. வீட்டின் முன் தீக்குளிப்பு..!

Q

மதுரை மாவட்டத்தில் கிழக்கு சட்ட மன்றத் தொகுதியில் அமைச்சர் பி.மூர்த்தியும், மத்திய தொகுதியில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் , வடக்கு தொகுதியில் கோ.தளபதியும் எம்.எல்.ஏ.,வாக உள்ளனர். மற்ற தொகுதியில் கூட்டணி கட்சி மற்றும் அ.தி.மு.க., மற்றும் ஓ.பி.எஸ்., ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் பதவியிலும் உள்ளனர். மூன்று தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் முக்கிய நபர்களாக பார்க்கப்படும் நிலையில் தி.மு.க.,வில் மறைமுகமாக சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. நேரடியாக பகை வெளிப்படவில்லை என்றாலும் மதுரை தி.மு.க.,வில் புகைச்சல் இருந்து வருகிறது.

இந்நிலையில் வடக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.,வும்., தி.முக மதுரை மாநகர் மாவட்ட செயலாளருமான கோ.தளபதியின் வீட்டு முன் தி.மு.க நிர்வாகி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ.தளபதியின் வீட்டின் முன் தீக்குளித்த திமுக நிர்வாகி, 90 சதவீத தீக்காயங்களுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கரை பகுதியில் உள்ள கோ.தளபதி வீட்டின் முன், மானகிரி பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி கணேசன் என்பவர் எம்எல்ஏவுக்கு எதிராக கோஷமிட்டபடியே தீக்குளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like