1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : திமுக - மதிமுக தொகுதி ஒதுக்கீடு இறுதியானது..!

Q

கலைஞர் கருணாநிதி மறைந்த பின்னர் ஸ்டாலின் தலைமையில் திமுக எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் அந்த கட்சி பெரிய வெற்றியை பெற்று வருகிறது. 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து மட்டங்களிலும் பெரும் வெற்றி திமுக வசமாகியது. 2024 மக்களவைத் தேர்தல் முடிவும் தமிழ்நாட்டில் திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
ஸ்டாலின் பெற்று வரும் இந்த தொடர் வெற்றிக்கு முக்கியமான காரணம், அவர் அமைத்த கூட்டணி என்று உறுதியாக சொல்லலாம். காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி என சிறியதும் பெரியதுமாக பல்வேறு தளங்களில் செல்வாக்குள்ள கட்சிகளை ஒருங்கே கொண்டு வந்து அதை சிதறவிடாமல் கொண்டு செல்வது தான் ஸ்டாலினின் பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்திட்டனர். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களை உறுப்பினர் பதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
தனிச் சின்னத்தில் போட்டி:
மக்களவைத் தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கிய தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார். தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் தொகுதி நிலவரம் தெரிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்

Trending News

Latest News

You May Like