1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : திமுக 40 தொகுதிகளிலும் முன்னிலை..! சௌமியா அன்புமணி பின்னடைவு..!

1

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பாமக சார்பில் சௌமியா அன்புமணியும், திமுக சார்பில் வழக்கறிஞர் ஆ.மணி, அதிமுக சார்பில் மருத்துவர் அசோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா பொன்னிவளவனும் போட்டியிட்டனர். இதுவரை தர்மபுரி தொகுதியில் பாமக தான் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. பாமக இத்தொகுதியில் நான்கு முறை வெற்றிபெற்றுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்று நாடாளுமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டார். பலரும் அன்புமணி தான் வெற்றிபெறுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் அனைவர்க்கும் அதிர்ச்சி தரும் வகையில் அன்புமணி கடந்த முறை தோல்வியை தழுவினார். இதையடுத்து திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் எஸ்.செந்தில்குமார் 46.96% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இம்முறை அன்புமணி ராமதாஸ் தன் மனைவி சௌம்யா அன்புமணியை தர்மபுரி தொகுதியில் நிறுத்தினார்.இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதன் முதல் முன்னிலையில் இருந்து வந்தார் சௌம்யா அன்புமணி. ஆனால் சற்றுமுன் வந்த தகவலின்படி தருமபுரி திமுக வேட்பாளர் மணி 13703 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

பாஜக கூட்டணியில் சௌம்யா அன்புமணி மட்டும் தான் முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது பின்னடைவு ஏற்பட்டதால் திமுக 40 /40 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றனர்     

Trending News

Latest News

You May Like