#BREAKING : தீக்குளித்த திமுக பிரமுகர் உயிரிழப்பு..!
திமுக மதுரை வழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாநகர மாவட்ட செயலாளருமான தளபதி வீடு திருப்பரங்குன்றம் பசுமலை அருகே உள்ள மூலக்கரை பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 7:30 மணிக்கு மாநகரி பகுதியை சேர்ந்த திமுக நிர்வாக கணேசன் என்பவர் எம்எல்ஏ வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது கணேசன், வடக்கு தொகுதி எம்எல்ஏவை சந்தித்து புகார் அளித்ததாவது, மானகிரி பகுதியில் தனக்கும் மற்ற திமுக நிர்வாகிகளுக்கும் முன்விரோதம் இருந்து வருவதாகவும் இதை உடனடியாக தலையிட்டு சரி செய்யும் படியும் புகார் அளித்து உள்ளர்.
இந்த நிலையில் 8:00 மணி அளவில் வெளியே வந்த கணேசன் திடீரென வெளியே வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இதனை அடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஓடி வந்து தீயை போராடி அணைத்து பின்னர் உயிருக்கு போராடிய திமுக நிர்வாகியை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு 90 சதவீத தீ காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துனர்.
இந்நிலையில், நேற்று மதுரையில் திமுக மாநகரச் செயலாளர் கோ.தளபதி வீட்டின் முன், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற திமுக பிரமுகர் மானகிரி கணேசன் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். முன்பு ஆளுநரைக் கண்டித்து தீக்குளிக்க முயன்று, உடல் நலம் பாதிக்கப்பட்ட அவருக்கு, கட்சி உதவவில்லை என்பதால், அவர் மீண்டும் தீக்குளித்து உயிரிழந்திருக்கிறார்.