#BREAKING : நெல்லை மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் தேர்வு!
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து மாநகராட்சியின் புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி நடைபெறும் இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக சார்பில் 25வது வார்டு உறுப்பினர் ராமகிருஷ்ணன் (எ) கிட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் மேயர் வேட்பாளர் ராமகிருஷ்ணன் சக திமுக கவுன்சிலர்கள் படை சூழ, சைக்கிளில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.இவர் அனைத்து இடங்களுக்கும் சைக்கிள் தான் செல்வார் என்றும், இவருக்கு சொந்தமாக கார், பைக் கூட கிடையாது என்றும் மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேயராக திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன் தேர்வு
நெல்லை மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய மேயராக ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்