1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அறிவிப்பு..!

1

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டிடுவதாக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஜுலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனிடையே இன்று விழுப்புரம் மாவட்ட செயலாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

திமுக விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் எம்.பி.,யும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம் சிகாமணி நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல், அமைச்சர் செஞ்சி மஸ்தான் வகித்து வந்த விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்த விடுவித்து டாக்டர் சேகர் என்பரை மாவட்ட பொறுப்பாளராக நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
 

Trending News

Latest News

You May Like