#BREAKING : திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி விபத்தில் பலி..!
அ.தி.மு.க., மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழி பேத்தி திவ்ய பிரியா(28). மேட்டுப்பாளையம் கல்லார் பத்தடி பாலம் அருகே கார் விபத்தில் அவர் உயிரிழந்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின், மகள் வழி பேத்தியான திவ்யா, இன்று (மே 22) மாலை சாலை விபத்தில் பலியானார்.
மேட்டுப்பாளையம் -ஊட்டி சாலையில், கல்லார் பத்தடி பாலம் அருகே அவர் சென்ற கார் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.