1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்த தனுஷ்..!

Q

நயன்தாரா கடந்த 2022ம் ஆண்டு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வீடியோ நெட்ஃப்ளிக்சில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த வீடியோவில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட பல காட்சிகளை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளனர். 

அந்த படத்தை பிரபல நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை தன்னை கேட்காமல் பயன்படுத்தியதற்காக தனுஷ் நயன்தாராவிடம் ரூபாய் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தார். ஆனால், நயன்தாரா தரப்பினர் தனுஷிற்கு பதிலடி தரும் வகையில் விளக்கம் அளித்திருந்தனர். 

இந்த நிலையில், நடிகை நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் அந்த அவர்களது திருமண ஆவணப்படத்தை வெளியிட்ட நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் மீது தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகர் தனுஷ் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் NETFLIX நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். தனது தயாரிப்பில் வெளியான 'நானும் ரவுடி தான்' திரைப்படத்தின் காட்சிகளை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்கள் திருமண வீடியோவில் அனுமதியின்றி பயன்படுத்தியதாக மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like