1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : திருவண்ணாமலையில் ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!

Q

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 04ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. பத்து நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில் தினமும் மாலையில் பஞ்ச மூர்த்திகள் பவனி நடைபெற்று வருகிறது. 

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான 2668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றும் வைபவம் டிசம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால சமீபத்தில் திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. ஏற்கனவே நடைபெற்ற மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியாகி உள்ளனர். இதைத் தொடர்ந்து மலைக்கு தீபக் கொப்பரை எடுத்துச் செல்லும் வழியிலும், மலை மீது கொப்பரை வைக்கும் இடத்திலும் மண்சரிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மலையில் மண்ணின் தரம் குறித்து மத்தியக் குழுவினர் ஆய்வு நடத்தினர்.

அதில் மண்சரிவு காரணமாக பாறைகள் உறுதியற்ற நிலையில் இருப்பதாகவும், பல இடங்களில் புதைகுழிகள் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதற்கிடையே வானிலை மையமும் டிசம்பர் 11ம் தேதி முதல் திருவண்ணாமலை பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்தது. இதனால் மகாதீபம் ஏற்றும் நாளில் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்களா? மகாதீபம் ஏற்றப்படுமா? மகா தீபம் ஏற்றுவதற்கு சிக்கல் வருமா? என்றெல்லாம் பக்தர்களிடம் குழப்பமும் பதற்றமும் ஏற்பட்டது.

திருவண்ணாமலையில் ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

மேலும், காா்த்திகை தீபத் திருவிழாவில் மலையின் உச்சியில் பரணி தீபம் ஏற்றுவதற்காக 300 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like