#BREAKING: பக்தர்கள் ஷாக்..! தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை..!

தென்காசியில் உள்ள பழமையான காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரிய வழக்கில் மனு குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், இணை ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டது.
தென்காசியை சேர்ந்த நம்பிராஜன் தாக்கல் செய்த மனுவில், "தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிசேகத்திற்கு பணிகள் நடைபெற்று வருகிறது.
பழங்கால கற்களால் கட்டப்பட்ட கோவிலை சுற்றிலும் உள்ள கோவில் வளாகம் சுவர், வடிகால் நீரால் நனைந்து சிதிலமடைந்த நிலையில், வளாக சுவரை உடனடியாக புதிப்பித்து சுவர் எழுப்பி சீரமைக்க வேண்டும்.
கோவில் வளாகத்திற்குள் தரைமட்டம் தாழ்ந்துள்ளதால், கோவில் வளாகம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. டிராக்டர்கள் மணல் ஏற்கனவே கோவிலில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
கோவிலைச் சுற்றிலும் கோபுரத்திற்குத் தேவையான விளக்குகளை இன்னும் ஏற்றி வைக்கும் பணி முழுமை அடையாமல் உள்ளது. சாமி ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்பட்ட கோவில் தேர் இன்னும் இயங்கும் நிலைக்கு கொண்டு வரப்படவில்லை
கோயில் பகுதியில் நூறு டிராக்டருக்கும் அதிகமாக மண் அள்ளப்பட்டது. இதனால் கோயில் கட்டிடம் உறுதியிழந்துள்ளது. இதையடுத்து கோயில் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நிதி ஒதுக்கியது. இந்த நிதி முறையாகச் செலவிடப்படவில்லை. அரசின் நிதியில் மோசடி செய்யப்பட்டதுடன், கோயிலின் உறுதித்தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே கோவிலில் உள்ள திருப்பணிகளை முழுமையாக நிறைவேற்றிய பின்னர், கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும்,மேலும், தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் வருகின்ற ஏப்ரல் 07 அன்று நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறி உள்ளார்.
மனுவை நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பில், திருப்பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மனுவுக்கு அறநிலையத் துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.
இந்நிலையில் தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.