1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பக்தர்கள் அதிர்ச்சி..! சென்னை கபாலீஸ்வரர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Q

சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் கோவில். வழக்கம்போல் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து கொண்டு இருந்தனர். 

இந்தநிலையில் கோவிலுக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து கோவில் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கபாலீஸ்வரர் கோவிலுக்குள் மோப்ப நாயை பயன்படுத்தி கோவில் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அறிந்த பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில் சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

Trending News

Latest News

You May Like