1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: வெள்ளியங்கிரியில் பக்தர் உயிரிழப்பு..!

Q

வெள்ளியங்கிரி மலை, அடிவாரம் பூண்டியிலிருந்து, ஐந்தரை கி.மீ., மலையேறி சென்றால், சிவபெருமானை தரிசிக்கலாம். இம்மலைக் கோவிலுக்கு செல்ல, ஏழு மலைகளை கடந்து நடந்தே செல்ல வேண்டும். மலையின் ஏழாவது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் விரும்புகிறார்கள். பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
அந்த வகையில், வெள்ளியங்கிரி மலையேறி திரும்பிய பெங்களூருவை சேர்ந்த பக்தர் சிவா, 40, என்பவர், மூன்றாவது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அடிவாரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, டோலி மூலம் அடிவாரத்திற்கு சிவா அழைத்துவரப்பட்டார். அங்கு வந்த 108 மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்துவிட்டு, பக்தர் சிவா உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like

News Hub