1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - பாலச்சந்திரன் பேட்டி..!

1

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தெற்கு வங்க கடலில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே சுமார் 880 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மாலைக்கு பின் மழை படிபடியாக அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை, நாகபட்டின, தஞ்சாவூர், திருவரூர்,மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் சென்னையில் நாளை மறுநாள் முதல் மழை வெளுத்து வாங்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. இன்று சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் காலையில் லேசான மழை பெய்தது. இதேபோன்று டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை விட்டு விட்டு பெய்தது. தொடர்ந்து இன்று மாலையில் இருந்து மழை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 

Trending News

Latest News

You May Like