#BREAKING : டில்லி கணேஷ் இறுதி ஊர்வலம் தேசியக்கொடி போர்த்தி மரியாதை!

தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் டெல்லி கணேஷ்.
ரஜினி, கமல் முதல் இன்றைய தலைமுறை முன்னணி ஹீரோக்கள் வரை பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர் கிட்டதட்ட 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைத்துறையைத் தாண்டி இந்திய விமானப்படையிலும் 1964 முதல் 1974 வரை பணியாற்றியிருக்கிறார்.
குணச்சித்திர வேடம், நகைச்சுவை, வில்லனாகவும் நடித்துள்ளார். டிவி சீரியல் மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் திரை உலகினர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் டெல்லி கணேஷ் உடலுக்குத் தேசியக் கொடி போர்த்தி விமானப்படையினர் மரியாதை செய்தனர். விமானப்படையில் அவர் 10 வருடம் பணியாற்றியதைத் தொடர்ந்து அதை கௌரவிக்கும் விதமாக மரியாதை செய்துள்ளனர்.