1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING :டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்..!

1

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக விசாரிக்க டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டார். இது தான் டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது.டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இந்த வழக்கில் தான் கைதாகி ஓராண்டிற்கு மேல் சிறையில் இருக்கிறார். மேலும், பல முக்கிய தலைவர்களும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர்.

இறுதியாக டெல்லி முதல்வரான கெஜ்ரிவாலும் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருப்பதால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்தாலும் தொடர்ந்து டெல்லி முதல்வராக நீடித்து வருகிறார். அங்கிருந்து மக்களுக்குக் கடிதங்களையும் அனுப்பி வருகிறார்.

இதற்கிடையே ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. லோக்சபா தேர்தலும் நடக்கும் நிலையில், கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.எந்த அரசியல் தலைவருக்கும் பிரசாரம் செய்வதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்படவில்லை என்ற அமலாக்கத் துறை இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும் கூறியிருந்தது.

இந்தச் சூழலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like