#BREAKING : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய முடியாது : உச்சநீதிமன்றம்..!
மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே கெஜ்ரிவால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், மதுபான முறைகேடு வழக்கில்டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை அடுத்து, கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்கக்கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள், ''டில்லி முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய முடியாது. இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை'' எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீதிமன்றம் செல்ல முடியாது. டெல்லி லெப்டினண்ட் கவர்னர் இதைப் பார்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.