1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : ஆவடியில் பூட்டிய வீட்டிலிருந்து தந்தை-மகளின் அழுகிய உடல்கள் மீட்பு..!

Q

வேலூரை சேர்ந்தவர் சேர்ந்தவர் சாமுவேல் சங்கர். 70 வயதான இவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதனால் தனது மகளுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயிலில் வீடு எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக அவரது வீடு பூட்டியிருந்தது.

இதனால் அந்த பகுதியில், துர்நாற்றம் வீசு தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தனர்.

அப்போது படுக்கையறையில் சாமுவேல் மற்றும் அவரது மகள் இருவரும் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இருவரின் உடல்களையும் மீட்ட காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், சில மாதங்களுக்கு முன்பு சாமுவேல் சங்கருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில், சிகிச்சையின்போது அவர் இறந்துள்ளார்.

சிகிச்சையின்போது சாமுவேல் இறந்ததால், தன்னிடம் வாக்குவாதம் செய்த சிந்தியாவை எபனேசர் தள்ளிவிட்டதில் பெண் உயிரிழந்துள்ளார். பின் மருத்துவர் வீட்டை பூட்டிவிட்டு தப்பியுள்ளார்.

இதனையடுத்து மருத்துவர் சாமுவேல் எபனேசர் என்பவரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

Trending News

Latest News

You May Like