#BREAKING : ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை..!

கனகராஜ், அவரது காதல் மனைவி 2019 ஜூன் மாதம் ஆணவக் கொலை செய்யப்பட்டனர். குற்றவாளி வினோத்குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
2019ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் தம்பதியினரை ஆணவக் கொலை செய்த குற்றவாளி மரண தண்டனை வழங்கும் அளவுக்கு குற்றம் செய்திருப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார். காதல் திருமணம் செய்துகொண்ட கனகராஜ், வர்ஷினி இருவரையும் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியதில் இருவரும் உயிரிழந்தனர். அதில் முக்கிய குற்றவாளியான வினோத் குமார் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் 29ஆம் தேதி வாசிக்கப்படவுள்ளது.