1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பெங்கல் பரிசு தொகை வழங்கும் தேதி அறிவிப்பு..!

1

தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாள் மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நன்னாளை முன்னிட்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-1-2024 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்பட என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

முன்னதாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் சார்பாக பொங்கல் பரிசு தொகை 2000 முதல் 5000 ரூபாய் வரை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் என முதலமைச்சர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம் செய்யப்படும். அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பயனாளிகள் ரேஷன் கடைகளுக்குச் சென்று பரிசு தொகுப்பைப் பெறலாம்எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது 

இந்நிலையில் நாளை முதல் ஜன. 9ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை 13ம் தேதிக்குள் பொங்கல் பரிசு பெற முடியாதவர்கள் 14ம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு

Trending News

Latest News

You May Like