#BREAKING: ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு! தமிழக அரசு முடிவு!

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் பாதிப்பு அனைத்து தரப்பு மக்களையும் அச்சுறுத்தி வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 5,48,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தினந்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது.
இந்நிலையில், தற்போது நிலவி வரும் ஊரடங்கு நாளையுடன் முடிகிற நிலையில், ஜூலை 31ம் தேதி வரையில் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மகாராஷ்டிராவிலும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in